3 Nov 2021

பால் சொரியும் வேம்பு மரம்

SHARE

பால் சொரியும் வேம்பு மரம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள மகிழூர்முனை கிராமசேவையாளர் பிரிவில் பிராமணர் ஒழுங்கையில் வயல் ஓரமாக அமைந்துள்ள வேம்பு (வேப்பை) மரத்திலிருந்து பால் வடிந்து கொண்டிருக்கின்றது.

இத்தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து அதனைப் பார்வையிட்டும், புகைப்படம் எடுத்தும், மரத்திற்கு பட்டு கட்டியும், அதனருகே பாத்திரம் ஒன்று வைத்து காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தும் வருவதையும் அவதானிக்க முடிகின்றது.












SHARE

Author: verified_user

0 Comments: