26 Nov 2021

மட்டக்களப்பில் மழை வெள்ளம் வீதிளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்கின்றது.

SHARE

மட்டக்களப்பில் மழை வெள்ளம் வீதிளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக தாழ் நிலங்கள் வெள்ளநீரால் மூடப்பட்டுள்ளன. மேலும் இதனாhல் சில போக்குவரத்து மார்க்கங்களிலும், பாதிப்பு எற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் சற்று தழம்பல் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் பெய்து வரும் பலத் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் மண்டூர் - தம்பலவத்தை பிரதான வீதி, வெல்லாவெளிமண்டூர் பிரதான வீதி, ஆனைகட்டியவெளிபலாச்சோலை பிரதான வீதி, ஆகியவற்றை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து வருவதானால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். 

இது இவ்வாறு இருக்க வெல்லாவெளி  - மண்டூர் பிரதான வீதியை ஊடறுத்து இரண்டு இட                                                                                 ங்களில் வெள்ள நீர் பாய்வதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் பிரயாணிகளின் நன்மை கருத்தி போரதீவுப் பற்றுப் பிரதேச சபையினால் உழவு இயந்திரங்களைக் கொண்டு பிரயாணிகளை ஏற்றி இறக்கும்  செயயற்பாடு வெள்ளிக்கிழமை(26) முதல் ஆரம்பிக்கப்பட்டள்ளன.

வெல்லாவெளிமண்டூர் பிரதான வீதி வருடாந்தம் இக்காலப்பகுதியில் வெள்ளத்தால் மூழ்கடிககப்படுவது வழக்கம். இதனால் அருகிலுள்ள வேத்துச்சேனைக் கிராம மக்கள் இக்காலப்பகுதியில் வெளியில் செல்வதுவும். வெளி நபர்கள் அங்கு செல்வதற்கும் பாரிய பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக எமது பிரதேச சபையின் 2 உழவு இயந்திரங்களையும் 10 உழியர்களையும், பயன்படுத்தி மக்களைக் கரையேற்றி போக்குவரத்தினை இலகு படுத்தும் பணியை முன்னெடுத்துள்ளோம். இதனை வருடாந்தம் செய்து வருகின்றோம். எனினும் இவ்வாறு இவ்வீதியை ஊடறுத்து குறிப்பட்ட அளவு நீர் பாயும் நிலையில்தான் எம்மாலும் இந்த சேவையைச் செய்ய முடியும், மேற்கொண்டு நீர் அதிகரிக்கும் பட்சத்தில் எம்மால் இதனை மேற்கொள்ள முடியாத நிலைமைக்கும் தள்ளப்படுவோம். எனினும் இதற்கு நிரந்தரமாக பாலம் அமைக்கப்படும் பட்சத்தில்தான் மக்களின் போக்குவரத்து இலகுபடுத்தப்படும். என இதன்போது போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை(26) காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 143.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார். எனினும் மாட்டத்தில் அமைந்துள்ள சிறிய குளங்கள் நிரம்பியுள்ள இந்நிலையில் நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 21அடி 8 அங்குலமாக உயர்ந்துள்ளதாக அக்குளத்திற்குப் பொறுப்பான நீர்பாசனப் பெறியியலாளர் தெரவித்தார்.



















SHARE

Author: verified_user

0 Comments: