கிராங்குளத்தில் பாரிய விபத்து ஒருவர் மரணம்.
கத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிராங்குளத்தில் செவ்வாய்க்கிழமை(28) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் களுதாவளையைச் சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க ரவிச்சந்திரன் பிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது……
மட்டக்களப்பு பகுதியிலிருந்துகளுவாஞ்சிகுடி பக்கமாக பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கள் மீது, களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்து கார் மோத்தியதனாலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக அருகில் நின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்விபத்து சம்பவத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் காருக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment