50000 மில்லி லீற்றர் கசிப்பு 40000 மில்லி லீற்றர்
கோடாவுடன் ஒருவர் கைது.
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் மேற்கொள்யபபட்ட திடீர் சுற்றி வளைப்பில் வீடொன்றில் உற்பத்தி செய்யப்பட்ட 50000 மில்லி லீற்றர் கசிப்பு 40000 மில்லிலீற்றர் கோடா மற்றும் கசிப்பு தயாரிக்கும் பெருமளவு உபகரணங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றி விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார்.
வியாழக்கிழமை(14) அதிகாலை 1.00 மணியளவில் கிடைக்காப் பெற்ற தகவலொன்றையடுத்து
கிரானிலுள்ள குறித்த வீட்டைச் சுற்றி வளைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கசிப்பினைக் கைப்பற்றியதுடன்
சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
கைதான நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment