25 Oct 2021

வர்த்தகரின் 30 இலட்சம் செலவில் ஜனாசாக்களை ஏற்ற வாகனம் அன்பளிப்பு.

SHARE

வர்த்தகரின் 30 இலட்சம் செலவில் ஜனாசாக்களை ஏற்ற வாகனம் அன்பளிப்பு.

ஜனாசாக்களை(சடலங்கள்) வைத்தியசாலைகளிலிருந்து வீடுகளுக்கும் அடகக்கஸ்தவங்களுக்கும் இலவசமாக எடுத்துச் செல்ல வர்த்தகர் ஒருவர் தனது 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனமொன்றை அன்பளிப்புச் செய்துள்ளார்.

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு இவ்  வாகனம்  ஞாயிற்றுக்கிழமை (24)  கையளிக்கப்பட்டது.

இந்த வைபவம் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் அலுவலகத்தில் அதன் தலைவர் யு.எல்.எம்.றபீக் தலைமையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், குருக்கள்மடம் இராணுவ முகாம் அதிகாரி கெப்டன் என்.சி.அத்துக்கொரல, காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஆலோசகர்களான எம்.எம்.ஜரூப், அஷ்ஷெய்க் எம்.சி.எம்.றிஸ்வான் மதனீ,வாகனத்தை அன்பளிப்புச் செய்த  காத்தான்குடி இமாஸா  நிறுவன உரிமையாளர் எம்.அஜ்வத் மற்றும் பொலிஸ் அதிகாரி உட்பட ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த அமைப்பின் செயற்திட்டம் தொடர்பாக இதன் ஆலோசகர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் எம்.சி.எம்.றிஸ்வான் மதனீ உரையாற்றினார்.

இதன் போது காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் சேவையை பாராட்டி நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஜனாஸாக்களை ஏற்றுவதற்கான வாகனமும் கையளிக்கப்பட்டது.

இந்த வாகனம் காத்தான்குடி இமாஸா  நிறுவனத்தின் உரிமையாளர் எம்.அஜ்வத் அவர்களினால் ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த  வாகனத்தை வாங்குவதற்கான39 இலடௌசசேச் ரூபாய்  நிதியுதவினை காத்தான்குடி இமாஸா  நிறுவனத்தின் உரிமையாளர் எம்.அஜ்வத் செய்துள்ளார்.

இவ் வாகனத்தின் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட வைத்தியசாலைகளில் மரணிக்கும்  ஜனாசாக்களை ஏற்றி கொடுத்து வருகின்றனர்.

அதே போன்று ஜனாஸா நலன்புரி அமைப்பு ஜனாசாக்களை அடக்குவதற்கும் உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user

0 Comments: