ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி 16000 மில்லிகிறாம் கேரளா கஞ்சா,400 மில்லி கிராம் ஐஸ் கடத்திய மூவர் கைது--மோட்டார் சைக்கிளும் மீட்பு.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி 16000 மில்லி கிராம் கேரளா கஞ்சா
மற்றும் 400 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளைக் கடத்திய மூவர் வியாழக்கிழமை (09) மாலை
ஏறாவூர் பகுதியில் கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்குப் பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும்
மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாணைப் பிரிவு பொறுப்பதிகாரி
ஐ.பி.பண்டார தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது 16000 மில்லி கிராம்
கேரளா கஞ்சா,400 மில்லி கிராம் ஐஸ் ஆகியவற்றுடன் மூவர் கைது செய்யப் பட்டுள்ளதுடன்
அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
கைதான நபர்களும் போதைப் பொருட்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment