மட்டு. வவுணதீவில், ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி வாகனத்தில் மண் அகழ்ந்த இருவர் கைது.
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களுடன் இருவர் புதன்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி. நிஷாந்த கப்புகாமியின் ஆலோசனையின்படி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக வவுணதீவு கரடிப்பூவல் பகுதியில் ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி லோடர் (பெக்கோ) வாகனத்தினால் கெண்டர் ரக வாகனத்தில் மண் ஏற்றுகையில் அதிலிருந்த இருவரையும் தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இச் சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும்
வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment