இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சூம் தொழில் நுட்பத்தினுடான கலந்துரையாடலின்போது கலந்து கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
யுத்தத்தின் காரணமாக பல உயிரிழப்புக்கள், உடமை இழப்புக்கள் காணப்பட்டன. இது ஒருபுறமிருக்க அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துக்களை கடந்த வாரம் பெற்றிருந்தோம். இது சந்தோசப்படக்கூடிய விடையமாக இருந்தது. வடக்கு கிழக்கிலே இருக்கின்ற பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்பதற்கு இக்கலந்துரையாடலில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
நல்லிணக்கம் ஒருமைப்பபாடு, அனைத்தும் தேவைப்பாக உள்ளது. நாட்டினுடைய தலைவர் நாட்டின் எதிர்காலம் குறித்து செயற்பட வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.
வடக்கு கிழக்கு, தென்கு, மேற்காக இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவை உள்ளது. அந்த அடிப்படையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. நாங்கள் அனைவரும் கௌரவமாக வாழவேண்டிய சூழலை அனைவரும் ஏற்றுக் கொள்தல் வேண்டும். அதனை யாரும் மறுதலிக்க முடியாது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment