19 Jul 2021

ஊடகங்களைப் பார்க்கின்ற மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள், அழுத்தங்கள் பிரயோகிக்கின்றார்கள் என எண்ணிவிட வேண்டாம் - பிள்ளையான் எம்.பி.

SHARE

ஊடகங்களைப் பார்க்கின்ற மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள், அழுத்தங்கள் பிரயோகிக்கின்றார்கள் என எண்ணிவிட வேண்டாம் - பிள்ளையான் எம்.பி.

ஊடகங்களைப் பார்க்கின்ற மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள், அழுத்தங்கள் பிரயோகிக்கின்றார்கள் என எண்ணிவிட வேண்டாம். ஆங்காங்கே ஜே.வி.பி இனரும், எதிர்கட்சியினரும், மாகாணசபை உறுப்பினர்களையும், பிரதேச சபை உறுப்பினர்களையும் வைத்து செய்கின் ஆர்ப்பாட்டம் ஒட்டு மொத்த நாட்டின் முடிவாக மாறவிடாது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் மாணவர்களுக்கம், ஆசிரியர்களுக்கும், ரெப் கணணிகளை வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ்  சனிக்கிழமை(17) மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குபட்ட்ட 14 பாடசாலைகளுக்கு 778 ரெப் கணணிகள் வழங்கு வைக்கும் நிகழ்வு வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், முன்னாள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன், மற்றும் கல்வி உயர் அதிகாரிகள் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் இதன்பேது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் நாட்டைப் பொறுப்பேற்றதிலிருந்து கொவிட் தொற்றும் ஏற்பட்டு ஒரு கடினமான சூழல் ஏற்பட்டிருந்தது. இன்னும் அந்த நிலமை நீடித்துக் கொண்டிருக்கின்றது. இதிலிருந்து உலகமும் எமது நாடும் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 375000 தடுப்பூசிகள் தேவை, தற்போது கிட்டத்தட்ட ஒரு 100000 தடுப்பூசிகள் வந்துள்ளன. அடுத்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுவிடும் என நம்புகின்றேன். அதன்பின்னர் பாடசாலைகள், சுற்றுலா தலங்கள் இயங்கி பொருளாதாரம் மேம்படும் என நம்பகின்றோம். 2022 ஆம் ஆண்டு ஒரு சுறு சுறுப்பான பொருளாதார வளர்ச்சிமிக்க ஆண்டாக மலரும்.

மட்டக்களப்பு மாவட்டம் இம்முறை அரசியல் ரீதியான ஒரு பெரும் மாற்றத்தைச் செய்தது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து நானும், பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளோம். இது மிகப் பெரிய வரலாற்று நிகழ்வாகும். இம்மாவட்டத்தை அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதுபோல் கிழக்கு மாகாணத்தின் அதிகூடிய தமிழர்கள் வாழ்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளதால் விரும்பியோ விரும்பாமலோ நாங்கள் மாகாணத்திற்கான தலைமைப் பெறுப்பையும், நிருவாகத்தையும் பொறுப்பேற்கும் பொறுப்பையும் மக்கள் எங்கள் இருவருக்கும் சுமத்தியிருக்கின்றார்கள்.

கல்வியியலாளர்களும், பெரியோர்களும், தொடர்ந்தும் முயற்சிகளை எடுக்கவேண்டும். கொவிட் தொற்று காரணமாக நலிவடைந்துள்ள கல்வித்தரத்தை கட்டியெழுப்பு முயற்சியெடுக்க வேண்டும். ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது கல்வியில் வீழ்ச்சியிலுள்ளது.

எதிர்காலத்தில், அனைத்து கிராம மாணவர்ளுக்கும், ரெப் வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். பாடசாலைகளில் தற்காலிகமாக பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகள் தேவைகளுக்கு ஏற்ப,  நிரந்தர ஆசியரியர்களாக நியமிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊடகங்களைப் பார்க்கின்ற மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள், அழுத்தங்கள் பிரயோகிக்கின்றார்கள் என எண்ணிவிட வேண்டாம். ஆங்காங்கே ஜே.வி.பி யினரும், எதிர்கட்சியினரும், மாகாணசபை உறுப்பினர்களையும், பிரதேச சபை உறுப்பினர்களையும் வைத்து செய்கின் ஆர்ப்பாட்டம் ஒட்டு மொத்த நாட்டின் முடிவாக மாறவிடாது. ஜனாதிபதி அவர்கள் உறுதியாக எடுத்திருக்கின்ற நிலைப்பாடு சேதனப்பசளை உற்பத்தி, நமது எதிர்கால சந்ததியினர் உறுதியான வாழ வேண்டும் என எடுக்கப்பட்ட முடிவு அமுலாக்கப்படும். எனவே தற்போதிருந்தே சேதனைப் பசளை உற்பத்தியிலும், விவசாயிகள் முன்னெடுத்து விவசாய உற்பத்தியையும் மேம்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

















SHARE

Author: verified_user

0 Comments: