ஆனந்தகிரி அறப்பணி சபையினால் நாளாந்த தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கிவைப்பு.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா நோய்த்தாக்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக நாளாந்தம் தினசரி கூலித்தொழில் புரிந்து தொழில் அற்றிருந்த ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிவபுரம் கிராமத்திலுள்ள ஒருதொகுதி மக்களுக்கான உலருணவுப்பொதிகள் அண்மையில் மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையினரால் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆனந்தகிரி அறப்பணி சபையின் இணைப்பாளர்களான லோ.தீபாகரன், நே.பிருந்தாபன், நே.ஜனார்த்தனன், நே.நிறோஜன் மற்றும் சிவபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ம.சிவலிங்கம், செயலாளர். க.காந்தரூபன் ஆகியோர் கலந்துகொண்டு இவ் உலருணவு பொதிகளை வழங்கிவைத்தனர்.
இந்தியாவில் இருந்து வருகைதந்த வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜீ அவர்களின் நினைவாக ஸ்தாபிக்கப்பட்ட ஆனந்தகிரி அறப்பணி சபையானது இன, மத, மொழி பேதங்களை கடந்து மாதம் ஒருசெயற்றிட்டம் எனும் அடிப்படையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி, தொழில்வாய்ப்பற்றிருக்கும் இளைஞர்,யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் இலவச கருத்தரங்குகள், தொழில்பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திகொடுத்தல், பொருளாதார மேம்பாடு முதலான திட்டங்களை மையமாககொண்டு செயற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment