பெரியபோரதீவில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பெரியபோரதீவில் வியாழக்கிழமை(13) ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள 7 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சுகயீனம் காரணமாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்குச் சென்றபோது அவருக்கு வைத்தியசாலையில் மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் அவர்கள் மூவருக்கும் தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தொற்றாளர்கள் தொடர்பு வைத்திருந்ததாக கருத்தப்படும் குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர். அத்தனிமைப் படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 10 பேருக்கு வெள்ளிக்கிழமை(14) காலை மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையில் அதில் எவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதாக அப்பகுதி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment