13 Apr 2021

தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2021.

SHARE

மிதுனம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2021.பிலவ வருட ராசிபலன்கள் 

சார்வரி வருடம்  முடிவடைந்து அதன் பிறகு பிலவ வருடம் பிறக்கப்போகிறது. பொதுவாக மீண்டும் சுழற்சியாகும் இந்த தமிழ் வருடப்பிறப்பை வைத்துதான் ஜோதிட சாஸ்த்திரம் கணிக்கப்படுகிறது. ஜோதிடம் என்பது தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடம் பிறக்கும் சமயத்தை அடிப்படையாக கொண்டு கிரஹ நிலையை கொண்டே அந்த ஆண்டிற்கான பலன்களையும் பஞ்சாங்கக்‌ கணிப்பாகச்‌ சொல்லப்பட்டிருக்கு.

2021-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு எப்போது பிறக்கின்றது:-

தமிழ் புத்தாண்டு என்று சொல்லக்கூடிய பிலவ வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி (14.04.2021) புதன் கிழமை, பரணி நட்சத்திரம்‌, துவிதியை திதி, சித்தயோகம்‌ கூடிய சுபதினத்துல பிறக்கின்றது. திங்களின் மேஷ ரவி என்று சொல்லக்கூடிய மேஷ ராசியில்‌ சூரியன்‌ பிரவேசிக்கக்கூடிய நேரத்தைத்தான் மாதப்‌ பிறப்பு என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் மாதப்‌ பிறப்பின் முதல்‌ நாளான செவ்வாய்க்கிழமை இரவு 11.48 மணிக்கே தமிழ் புத்தாண்டு பிலவ வருடம் 2021 – 2022 பிறக்கின்றது.

சரி இப்பொழுது பிலவ வருடத்தின் பொதுவான பலன்கள் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கின்றது என்று இப்பொழுது நாம் இங்கு படித்து தெரிந்து கொள்வோம்.

பிலவ வருட ராசிபலன்கள் 2021 

2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் மேஷம்:

மேஷம்

யாருடைய உதவிகளும் இல்லாமல் எந்த காரியங்களையும் தனது சொந்த காலில் செய்ய நினைக்கும் மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த பிலவ வருடம் எப்படி இருகின்றது என்றால்? வீட்டில் இது வரை இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அனைத்து காரியங்களும் கைகூடும். தங்கள் வீட்டு வருமானத்தை அதிகரிக்க அதிகளவு பாடுபடுவீர்கள். ஆடை ஆபரணங்களின் சேர்க்கை அதிகரிக்கும். தங்கள் மகள் அல்லது மகனுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். அதேபோல் இது வரை திருமணம் ஆகாத மேஷம் ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். சித்திரை அல்லது ஆடி மாதங்களில் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும். விலகி போனவர்கள் நெருங்கி வருவார்கள். இருப்பினும் இந்த தமிழ் புத்தாண்டு தங்களுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகம் தரும் என்பதினால் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பரிகாரம்:

செவ்வாய்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகப்பெருமானை வணங்குங்கள். நன்மைகள் அதிகம் நடைபெறும். சிவப்பு நிற ஆடைகளை தானமாக கொடுங்கள்.

தமிழ் புத்தாண்டு ராசிபலன் ரிஷபம் 2021:-

ரிஷபம்

தர்மத்தின் வடிவான ரிஷபம் ராசிக்காரர்கள் எப்பொழுதுமே அனைவரது நன்மைக்காகவே உழைக்கும் குணத்தை கொண்டவர்கள். இவர்களுக்கு எப்பொழுதுமே வெள்ளந்தியான மனசு என்பதினால் அனைவரையுமே எளிதில் நம்பிவிடுவார்கள். இப்படிப்பட்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது என்று இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோமா?  ராசியில் 12-ல் இந்த புத்தாண்டு பிறப்பதினால் சுப காரியங்கள் அதிகரிக்க கூடிய ஆண்டாக இந்த தமிழ் புத்தாண்டு இருக்கின்றது. அதேபோல் வைகாசி மாதத்தில் இருந்து தங்களது வீடு மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவதினால் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். பிள்ளைகள் தங்களது சொல்பேச்சை கேட்டு அதன்படி நடந்து கொள்வார்கள். தங்களது முன்கோபம் மற்றும் அலட்சியம் இது போன்ற குணங்களை மாற்றி கொள்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு மார்கழி, தை மாதங்களில் குழந்தை பாக்கியம் உண்டாகும். தங்கள் தாய்வழி குடும்பத்தினருடன் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சில காரணத்தினால் பாதியில் நின்ற கட்டிடம் சார்ந்த வேலைகள் இந்த ஆண்டு நடந்து முடியும். பிறரிடம் வாங்கி இருந்த பழைய கடன்களை இந்த ஆண்டு முழுமையாக திருப்பி கொடுப்பீர்கள். ஆடை ஆபரணங்களின் சேர்க்கை அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகள், மன நிறைவு தரும். அக்கம் பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். இந்த புதிய ஆண்டு தங்களது வாழ்க்கைக்கு ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும் ஆண்டாகும்.

பரிகாரம்:-

பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து சிவ ஆலயம் சென்று வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.

தமிழ் புத்தாண்டு ராசிபலன் மிதுனம் 2021 – Tamil Puthandu Rasi Palan 2021:-

அமைதியும் விட்டுக்கொடுக்கும் குணங்களையும் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம். குடும்பத்தினர் தங்களது வார்த்தைகளுக்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள். வீட்டில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் தங்களது சொல்லிற்கு கட்டுப்படுவார்கள். மனைவிவழி குடும்பத்தினருடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் பேச்சு வார்த்தைகள் வெற்றியில் முடிவடையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தங்களது லாப ராசியில் இந்த வருடம் பிறப்பதால் அதிரடி முன்னேற்றங்கள் உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற இந்த தமிழ் புத்தாண்டு தங்களுக்கு வாய்ப்புகளை அள்ளித்தரும்.

பரிகாரம்:-

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.


  கடகம்:

kadagam

சந்திரனை ராசி அதிபதியாக கொண்ட கடகம் ராசி அன்பர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்க போகிறது என்று பார்ப்போம். வெளி இடங்களில் அல்லது வெளியூர்களில் தங்கி இருக்கும் கடகம் ராசிக்காரர்கள் இப்பொழுது குடும்பத்துடன் சேர்ந்து இருப்பதற்கு தங்களுக்கு நல்ல நேரம் பிறந்துள்ளது. அதேபோல் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்ல தயாராக இருப்பவர்களுக்கு வெளியூர்களிலும், வெளி நாட்டிலும் நல்ல வேலை கிடைக்கும். குருவின் பார்வையினால் தங்களுக்கு  திடீர் யோகங்கள் உண்டாகும். அதேபோல் நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் இந்த ஆண்டு நல்ல பலன் கிடைக்க போகிறது. திருமணம் ஆகாத கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நல்ல இடத்தில் இருந்து வரன் அமைந்து கூடிய சீக்கிரம் திருமணம் ஆகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பரிகாரம்:-

வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நன்மைகள் அதிகம் உண்டாகும்.

சிம்மம்:-

சிம்மம்

மனிதாவிமானம் அதிகம் கொண்ட சிம்மம் ராசி அன்பர்களே. இந்த ஆண்டு கிரகங்களின் அமைப்பு பொறுத்தவரை தங்களுக்கு மிகவும் நன்றாக அமைந்துள்ளது. சரி இந்த பிலவ வருடம் ராசி பலன்கள் எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம். குருபகவானின் அதிசார பெயர்ச்சி பார்வையின் காரணமாக தங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் இது வரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தங்களிடம் சண்டை போட்டு பிரிந்து சென்றவர்கள் இப்பொழுது ஒன்று சேர நல்ல நேரம் கூடிவந்துள்ளது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். இந்த ஆண்டு தங்கள் ராசியில் 6-ம் இடத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் தங்களுடைய அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றியில் முடிவடையும். அதேபோல் வீடு, மனை, வாகனம் வாங்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல வேலை கிடைக்கும். தங்கள் பிள்ளைகளினால் சந்தோஷமும் உண்டாகும். இருப்பினும் சிம்மம் ராசிக்காரர்கள் இந்த ஆண்டு தங்களது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் நல்லது.

பரிகாரம்-

மேலும் மேலும் இந்த ஆண்டு நன்மைகள் நடைபெற ஸ்ரீ ஆஞ்சநேயரை தினமும் வழிபடுங்கள்.

கன்னி:-

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் பொதுவாக ஆலோசனைகளை வழங்குவதில் வல்லவர்கள். இந்த தமிழ் புத்தாண்டு இந்த ஆண்டு எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம். கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு கொஞ்சம் சுமாராக தான் இருக்கின்றது. அதாவது இந்த ஆண்டு உங்களுக்கு சந்திராஷ்டமத்தில் தொடங்குவதால் வீண் விமர்சனங்கள், மறைமுக எதிர்ப்புகள், பிரச்சனைகள் என்று அதிகமாக இருக்கும். ஆகவே யாரையும் நம்பி இந்த ஆண்டு எந்த காரியங்களையும் செய்யாமல் இருப்பது நல்லது. அதேபோல் கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து செல்வது நல்லது. 5-ம் இடத்தில் சனி பகவான் அமர்த்திருப்பதினால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் தங்களது அனைத்து செயல்களுக்கும் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்குதல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. மாணவ மாணவிகள் தங்களது படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகவும்.

பரிகாரம்:

கன்னி ராசிக்காரர்கள் இந்த ஆண்டு எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்கி கொள்ளாமல் இருக்க மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மனை வழிபடுவது நல்லது.

 துலாம்:-

துலாம்

ஒற்றுமைக்கு உதாரணமாக இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பிலவ வருடம் எப்படி இருக்கின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். உங்களுடைய ராசியில் 5-ம் இடத்தில் குருபகவான் இருக்கும் போது இந்த பிலவ வருடம் பிறக்கின்றது என்பதினால் இந்த வருடம் தங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் இப்பொழுது ஒன்று சேர்வார்கள். இருப்பினும் இந்த ஆண்டு துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் தங்களது உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீண் விவாதங்களை நீங்கள் இந்த ஆண்டு முற்றிலும் தவிர்த்து கொள்வது நல்லது. இந்த வருடம் தங்களுக்கு திடீர் பயணங்கள் அதிகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஏதாவது உதவிகள் கிடைக்கும். வியாபாரம் பொறுத்தவரை பழைய சரக்குகள் அனைத்தையும் விற்பனை செய்துவிடுவீர்கள்.

பரிகாரம்:

இந்த பிலவ வருடம் மேலும் தங்களுக்கு நன்மைகளை வழங்க பெருமாளை தொடர்ந்து வணங்கி வருவது நல்ல பலன்களை கொடுக்கும்.

விருச்சிகம்:-

விருச்சிகம்

தங்களுக்கு யோகாதிபதியாக இருப்பவர் தான் குருபகவான் என்றாலும் இந்த ஆண்டு தங்களுக்கு சுமாராக தான் இருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி வீட்டை மாற்றி கொண்டே இருப்பீர்கள். பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீண் விவாதங்களை முற்றிலும் தவிர்த்து கொள்வது நல்லது. இந்த ஆண்டு தங்களுக்கு எல்லா வகையான பிரச்சனைகள் வந்தாலும் அவற்றில் இருந்து சாதுர்யமாக கடந்து செல்வீர்கள். உத்தியோகத்தில் சிலவகையான பிரச்சனைகள் ஏற்படும் அதனை எதிர்கொண்டு முன்னேறி செல்வீர்கள். விவசாயிகள் மாற்று பயிர்களை பயிரிடுவதன் மூலம் லாபம் பெறலாம்.

பரிகாரம்:-

அனைத்து வகை பிரச்சனைகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இந்த ஆண்டு முழுவதும் விநாயகரை வழிபடுவது நல்லது.

 தனுசு:-

தனுசு

பாசத்திற்கு அடிமையாகும் தனுசு ராசிக்காரர்களுக்கு  இந்த ஆண்டு பிலவ வருடம் எப்படி இருக்கின்றது என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க. இளைய சகோதரர்கள் இந்த ஆண்டு தங்களுடைய எல்லாவிதமான செயல்களுக்கும் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பொன் பொருள் சேர்க்கை இந்த ஆண்டு அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. புகழ் பெற்ற ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரம் பொறுத்தவரை இந்த ஆண்டு கொஞ்சம் நன்றாக இருக்கும். மாணவ மாணவிகள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.

பரிகாரம்:-

தூய்மை பணியாளர்களுக்கு நீங்கள் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதன் மூலம் தங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் நன்மை நடக்கும்.

மகரம்:-

மகரம்

தன்மானத்தையும், சுய கவுரவத்தையும் என்றும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு தமிழ் வருடம் எப்படி இருக்கின்றது என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க. இந்த ஆண்டு தங்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். தங்களுடைய பேச்சிலேயே தங்களுடைய அனைத்து காரியங்களையும் சாதித்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சனிபகவான் உங்கள் ராசிக்குள் இருப்பதினால் தங்களது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 2-ம் இடத்தில் குருபகவான் இருப்பதினால் இந்த ஆண்டு வியாபாரம் நன்றாக இருக்கும். உத்தியோகம் பொறுத்தவரை ஊழியர்கள் தங்கள் மீது ஏதேனும் குறை கூறிக்கொண்டே இருந்தாலும் மேலதிகாரிகள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பரிகாரம்:

இந்த ஆண்டு முழுவதும் தங்களது அனைத்து முயர்த்திகளிலும் வெற்றி பெற ஸ்ரீமகா பிரத்யங்கிரா தேவியை வழிபட்டு வர அனைத்து முயர்த்திகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

 கும்பம்:-

கும்பம்

தங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு எதையும் செய்யும் குணங்களை கொண்ட கும்பம் ராசிக்காரர்களே இந்த பிலவ வருடம் தங்களுக்கு எப்படி இருக்கின்றது என்பதை பற்றி பார்ப்போம். இந்த பிலவ வருடம் தங்களுக்கு ஆரோக்கிய சம்மந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதினால் கும்பம் ராசிக்காரர்கள் தங்களுடைய ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தங்களுக்குள் நல்ல குணங்களும், சாமர்த்தியம் இருந்தாலும் இந்த பிலவ வருடம் தங்களுக்கு சின்ன சின்ன சோதனைகளை கொடுக்கும். ஆகவே இந்த ஆண்டு யாரையும் நம்பி பிரச்சனைக்குள் சிக்கி கொள்ளாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் தங்களுடைய அனைத்து காரியங்களுக்கும் ஆதரவாக இருப்பார்கள். இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று கும்பம் ராசிக்காரர்கள் இருப்பது மிகவும் நல்லது.

பரிகாரம்:-

அன்னதானம் செய்தல், ஏழை பெண்ணின் திருமணத்திற்கு உதவுதல், குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுதல் இது போன்ற செயல்களை செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

மீனம்:-

மீனம்

வாழ்க்கையில் அதிக எதிர்நிச்சல் போடும் மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த பிலவ வருடம் என்னென்ன பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பற்றி இப்பொழுது படித்தறியலாம் வாங்க. இந்த ஆண்டு குருபகவான் 12-ம் இடத்தில் 10 மாதங்கள் உங்கள் ராசியில் இருக்க போவதனால் குருபகவான் தங்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கமாட்டார். ஏதோ ஒரு காலத்தில் நீங்கள் உதவிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இப்பொழுது தங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்திற்கு உதவி செய்வார்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். ஏதேனும் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். இந்த ஆண்டு சனி பகவான் 11-ம் இடத்தில் இருப்பதினால் தங்களுது அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் தங்களிடம் சில முக்கியமான பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணம் ஆகாத மீனம் ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். சகோதரர்கள் இந்த ஆண்டு தங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

பரிகாரம்:-

திருச்செந்தூர் முருகப்பெருமானை ஒரு முறை வணங்கி வர நன்மைகள் உண்டாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: