19 Mar 2021

யானை மனிதன் மோதலைத் தடுக்க மட்டு.மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்.

SHARE

யானை மனிதன் மோதலைத் தடுக்க மட்டு.மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்.

தினம் தினம் தொடரும் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதலைதை தடுக்க வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் என்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.

வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தன் வழிகாட்டலில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையே அதிக மோதல்கள் இடம்பெறும் மட்டக்களப்பு-வாகரை பிரதேச செயலகப்பிரிவின் கல்லரிப்பு கிராமத்தில் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் வியாழக்கிழமை (18) ஆரம்பிக்கப்பட்டன.

சிதைவடைந்துள்ள யானை வேலிகளைப் புனரமைத்தல் யானைகள் வரும் வீதிகளில் மின் விளக்குகளைப் பொருத்துதல் காட்டுப்பகுதிகளில் சிரமாதானங்களை மேற்கொள்ளல் உட்பட பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வனஜீவராசிகள் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் என்.சுரேஸ்குமார் தலைiயில் இடம்பெற்ற நிகழ்வுகளில் வாகரை பிரதேச செயலாளர் வாகரை பிரதேச சபை தலைவர் பொலிசார் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: