உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு வெள்ளிக்கிழமை (19) மட்டக்களப்பு மன்றேஸா வீதியில் உள்ள செஞ்சிலுவை சங்க காரியாலயத்தில் நடைபெற்றது.
வருடாந்தம் நடைபெறும் இந்த இரத்ததான முகாம் இவ் வருடம் கொரோணா சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
இருப்பினும் பெருமளவான இளைஞர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களும் இவ் இரத்ததான முகாமில் கலந்து தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு கலந்து கொண்டு குருதி நன்கொடைகளை பெற்றுக்கொண்டது.
0 Comments:
Post a Comment