காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு.
மட்டக்களப்பு - கட்டுமுறிவுக்குளம் விவசாயக் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரான விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை 27.02.2021 அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கட்டுமுறிவுக் கிராம வாசியான பாக்கியராசா நாகேந்திரன் (வயது 50) எனும் 3 பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார்.
வெள்ளிழக்கிழமை வழமைபோன்று இவரும் இவரது மனைவியும் தங்களது வயல்வாடியில் வெள்ளாமைக் காவலில் நின்றிருந்தபோது காட்டுக்குள் இருந்து நெல் வயல்களுக்குள் பிரவேசித்த காட்டு யானை ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இவரைத் தாக்கிக் கொன்றுள்ளது.
அவ்வேளையில் அவரது மனைவி காட்டு யானைத் தாக்குதலிலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
பலியான விவசாயியின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்த வாகரைப் பொலிஸார் இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment