மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கொரோனா ! மாணவர்கள் தனிமைப்படுத்தலில்.
மட்டக்களப்பு நகரில் பாடசாலை மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
இதனையடுத்து, மேற்படி மாணவன் கல்வி பயின்ற வகுப்பில் அனைத்து மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாணவனுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த மேலும் 08 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 575ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 160 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment