சுயதொழில் முயற்சியாளர்களுக்கு கைத்தொழில் பயிற்சி ஆரம்பித்து
வைப்பு.
கடந்த 9 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களின் மேம்பாடு தொடர்பான பல்வகையான செயற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
அதன் ஓர் அங்கமாக சனிக்கிழமை (09) வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலமாங்கேனி கிராமத்தில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான தும்புத்தடி மற்றும் விளக்குமாறு உற்பத்தி செய்வதற்கான கைத்தொழில் பயிற்சி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பெண்கள் வீடுகளில் இருந்தவாறே முன்னெடுக்க கூடிய கைத்தொழில் முயற்சியினை ஊக்குவித்து அதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் முகமாக இச்செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தென்னை மரத்தின் விளைபொருட்களான அருகி வரும் தென்னம்தும்பு தும்புத்தடி, மற்றும் விளக்குமாறு போன்ற உற்பத்தி பெருட்களை தயாரிப்பதற்கான பயிற்சியும் அதற்கான மூலப்பொருட்களையும் இதன்போது வழங்கி ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது குறித்த பகுதியில் காணப்படும் லக்ஸ்மி எனும் பெண்கள் குழுவிற்கு இப்பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதோடு அவர்களுக்கு அப்பயிற்சியினை உக்குவித்து சந்தை வாய்ப்புக்களை பெற்று கொடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு இக்கைத்தொழில் முயற்சியினை சட்டபூர்வமாக பதிவு செய்வதற்கான வழிமுறைகளும் ஏற்படுத்தப்படுத்தி தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டதரணியுமான திருமதி மயூரி ஜனன் மற்றும் அவ்வமைப்பின் உத்தியோகதர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment