மட்டக்களப்பில் மேலும் 25 பேருக்கு கொரோனா வையடுத்து மாவட்டத்தில் 288 ஆக அதிகரிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் தனியர்வங்கி ஊழியர்கள் உட்பட 25 பேருக்கு செவ்வாய்க்கிழமை (05) கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 288 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டுவரும் எழுற்தமானமாக செவ்வாய்க்கிழமை 552 பேருக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் மற்றும் தனியார் வங்கியில் கடமையாற்றும் இருவர் உட்பட 3 பேருக்கும். பட்டிப்பளை சுகாதார பிரிவில் 2 பேருக்கும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 16 பேருக்கும், கோறளைப்பற்று மத்திய சுகாதார பிரிவில் 3 பேரும், ஓட்டமாவடி சுகாதார பிரிவில் ஒருவர் உட்பட 25 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 288 ஆக அதிகரித்துள்ளதுடன் இவர்களில் 182 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார முறைகளை பேணி செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment