9 Jan 2021

தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறிய 202 பேர் அன்டிஜன் பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி

SHARE

தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறிய 202 பேர் அன்டிஜன் பரிசோதனையில்  6 பேருக்கு தொற்று உறுதி.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு காத்தான்குடியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வீதிகளில் அநாவசியமாக நடமாடித் திரிந்த 202 நபர்கள் பிடிக்கப்பட்டு  அவ்விடத்திலேயே அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஆறுபேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காத்தான்குடி நகர சபை பிரிவில் நான்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த நான்கு பகுதிகளிலும் நடமாடும் வாகனத்தில் இந்த அண்டிஜன் பரிசோதனைகள் இடம் பெற்றன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகத்துக்கு முன்னாலிருந்து இந்த நடமாடும் அண்டிஜன் பரிசோதனை வாகன சேவை வெள்ளிக்கிழமை(06)   ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசன், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பாறூக் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயன சிறீ, காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.புலேந்திரகுமார் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வீதி வீதியாக செல்லும் இந்த அண்டிஜன் பரிசோதனை தொடர் வாகனத்தில் வீதியில் அநாவசியமாக நடமாடுபவர்கள் மற்றும் தேவையானோர் அண்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்படுவதுடன் தேவையேற்படின் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படு அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும். எடுக்கப்படும் என காத்தான்குடி சுகாதார வைத்தய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் தெரிவித்தார்.















SHARE

Author: verified_user

0 Comments: