மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை (03) மாலை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கொழும்புக்கு வேலை நிமிர்த்தமாக சென்று வந்து தனிமைப்படுத்தலில் இருந்தவர் எனவும், இதன்போது அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர் தங்கியிருந்த புதிய காத்தான்குடி அப்ரார் பிரதேசம் மற்றும் அஅவர் நெருங்கிப் பழிகிய்வர்கள் வசித்த ரிஸ்வி நகர் பிரதேசத்திலும் பல இடங்களில் பலர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் 41 ஆக தொற்றாளர்கள் அதிகரித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
0 Comments:
Post a Comment