நாளை கல்லடி இ.கி.மிசனில் "சிவானந்தபவன்" தங்கு விடுதி திறப்பு விழா!
இராம கிருஸ்ண மிசனின் மட்டு.மாநில கல்லடி ஆஸ்ரமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமையல் கூடம் மற்றும் 'சிவானந்த பவன்' என்னும் ஓ.எல் ஏ.எல் மாணவர்கள் தங்கும் விடுதியும் நாளை 18ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது.
அதிதிகளாக கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் சுவாமி ராஜேஷ்வரானந்த மஹராஜ் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
நாளை காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படும் வைபவங்களை தொடர்ந்து மாணவர்கள் இல்ல கட்டிடமாகிய சிவானந்த பவனில் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஹோமமும் பூஜையும் ஆராதனையும் நடைபெறும் என மட்டு.ஆஸ்ரம துணை மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment