மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயக் குளங்களைத் தூர் வாரி புனரமைப்புச் செய்ய மாவட்ட கமநல அமைப்புக்கள் வேண்டுகோள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயக் குளங்களைத் தூர் வாரி புனரமைப்புச் செய்ய மாவட்ட கமநல அமைப்புக்கள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அதன் தலைவர் கே.யோகவேள் தெரிவித்தார்.
பருவப் பெயர்ச்சி மழைப் பருவ காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளத்தில் மூழ்குவது சம்பந்தமான கவன ஈர்ப்பை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது விடயமாக திங்கட்கிழமை 31.08.2020 அவர் விவரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் பருவ மழைக் காலங்களில் வெள்ளத்தில் மூழ்வது வழமையான, அதேவேளை அழிவும் அச்சமும் தரக் கூடிய ஒன்றாக மாறிவிட்டிருக்கின்றது.
அதேவேளை, முறையான நீர்ப்பாசன முகாமைத்துவம் இல்லாத காரணத்தினால் இயற்கையாக மழை காலங்களில் கிடைக்கும் நீர் வெள்ளமாக வெளியேறி வீணாகக் கடலில் கலக்கிறது.
இந்த இடர் நிலைமையை எதிர்கொள்ள ஏற்றதான நிபுணத்துவ திட்டங்களை துறைசார்ந்தவர்கள் உருவாக்க வேண்டும்.
முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுரவணை ஊற்றுக் குளம், தாந்தா குளம், மகிழவெட்டுவான் குளம், கண்டியனாறு குளம், அடைச்சகல் குளம், நல்லதண்ணி ஊற்று குளம் ஆகிய ஆறு குளங்க
ளையும் தூர் வாரி நீரைத் தேக்கி வைத்து நீர்ப்பாசனம் செய்யக் கூடியதாக ஆக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவும் வெள்ள நீரைக் கட்டுப்படுத்துவதோடு ஈரலிப்பை தக்க வைப்பதன் ஊடாக தானிய சேனைப் பயிச் செய்கையையும் மேற்கொள்ள முடியும்.
அத்துடன் வளர்ப்பு விலங்குகள் காட்டு விலங்குகள் என்பவனவற்றின் நீர்த் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்
இந்த விடயத்தில் கூட்டிணைந்த திட்டமிடல் முக்கியம்” என்றும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment