பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலைய கண்காணிப்பில் ஈடுபடும் வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் செவ்வாய்கிழமை (28) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சியின்போது அரசாங்க அதிபர் கலாமதி மத்மராஜா கருத்து வெளியிடுகையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இத்தேர்தல் நடாத்தப்படுகின்றது. அவ்வாறு சுகாதார முறைப்படி இத்தேர்தல் கடமைகள் நடைபெறுவதை தாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதுடன், தொரிவத்தாட்சி அலுவலரின் பிரதிநிதிகளாக செயற்படும் நீங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக உரிய நேரத்திற்கு அறிக்கையிடவேண்டும் எனவும், அமைதியானதும் நேர்மையாகவும், சுமுகமாகவும் இப்பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு அனைவரும் ஒத்துளைப்பு நல்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் 74 வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள 428 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சியினை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர். சசீலன் வழங்கியதுடன் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வைத்தார்.
இம்முறை கல்குடா தேர்தல் தொகுதி மற்றும் பட்டிருப்புத் தேர்தல் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்குத் தேவையான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலும், மட்டக்களப்புத் தொகுதிக்குத் தேவையான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியிலும் விநியோகிகப்படவுள்ளன. இதேபோல் வாக்கெண்ணும் பணிகள் தேர்தல் தினத்திற்கு மறுதினமாகிய ஆகஸ்ட் 06 ஆந்திகதி காலை 08 மணிக்கு ஆரப்பிக்கப்படவுள்ளதுடன் அதேதினத்தில் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நிறைவுறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment