
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், சுகாதாரத் துறையினர், பொலிசார் மற்றும் முப்படையினர் தபால் மூல வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தினை தேர்தல்கள் திணைக்களம் ஏற்பத்திக் கொடுத்திருந்தது.
இதற்கமைவாக கடந்த 13 ஆந் திகதியிலிருந்து முதல் கட்டமாக தபால் மூல வாக்களிப்பு சுகாதாரப் பிரிவினருக்கும் 14, 15 ஆந்திகதிகளில் பிரதேச செயலகங்கள், மற்றும் ஏனைய அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் தபால் மூல வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. மேலும் 16, 17 ஆந் திகதிகளில் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் முப்படையினருக்கும் தபால்மூல வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இக்காலப்பகுதியில் தபால்மூல வாக்களிக்கத் தவறிய அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் 20 மற்றும் 21 ஆந் திகதிகல் வழங்கப்பட்டிருந்தன. இதன்படி இத்திகதிவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 12575 வாக்காளர்கள் தபால்மூலம் வாக்களித்திருந்தனர்.
இதுதவிர இத்தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்க தவறியவர்கள் எதிர்வரும் 23, 24 ஆந்திகதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வாக்காளிக்கமுடியுமென உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர். சசீலன் மாவட்ட ஊடகப் பிரிவிற்குத் தகவல் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment