மறத்தமிழர் கட்சி எதிர்வரும் கிழக்கு மகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
மறத்தமிழர் கட்சி தற்போது பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் களமிறங்க வேண்டும் என மக்கள் தெரிப்பதாக அக்கட்சியின் வெளித்தொடர்பு இணைப்பளர் நல்லதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அரசியல் என்பது முழுக்க முழுக்க சேவை என்பதை அறிவீர்கள், அரசியல் என்பது மக்களை வைத்து உழைப்பதற்காக அல்ல மக்களுக்காக உழைக்க வேண்டும். அதுதான் ஒரு சிறந்த அரசியல் ஆழுமை. அரசியல் என்ற எண்ணம் இல்லாதவன் மனிதனாக இருக்க முடியாது என்பது எனது திண்ணம். தாயகத்தில் வலிமை மிக்க வலுமையான மாற்றத்தை கொண்டுவர இளைய தலைமுறையாய் உருவாகும் மறத் தமிழர்கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும்.
தன்னலமற்று மக்களுக்கான சேவையை செய்வததற்கு நல்ல சிந்தனைதான் மாற்றத்தைக் கொண்டு வரும். அனைவரின் மனதில் இந்த மாற்றத்தை ஏற்றப்படுத்த வேண்டும்.
எதுவும் சேவையில் இருந்தே பிறக்கிறது, நமக்கான அரசியலை நாமே உருவாக்க வேண்டும் என்பதில் மறத் தமிழர்கட்சி உறுதியாய் நிற்கின்றது. நல்ல எண்ணங்களுடன் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மக்களுடன் மக்களாய் மறத் தமிழர்கட்சி இலங்கை சட்ட திட்டங்களுக்கமைய ஜனநாயக வழியில் போட்டியிடும். அப்போது எமது மறத் தமிழர் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள், என வெளித்தொடர்பு இணைப்பளர் நல்லதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment