12 May 2020

மட்டக்களப்பில் கொரோனா தொற்றை தடுக்க விசேட அதிரடிப் படையினர் தொற்றுநீக்கி விசிரல் பணிகளில் தீவிர ஈடுபாடு

SHARE
மட்டக்களப்பில் கொரோனா தொற்றை தடுக்க விசேட அதிரடிப் படையினர் தொற்றுநீக்கி விசிரல் பணிகளில் தீவிர ஈடுபாடு.மட்டக்களப்பில் அரச சேவைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியதையடுத்து கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரச அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசிரல் பணிகளை துரிதப்படுத்த அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமைய இம் மாவட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, மட்டக்களப்பு மாநகரசபை, பொலிஸ் திணைக்களம் மற்றும் அரச சார்பறற் நிறுவனங்கள் இந்த தொற்று நீக்கல் விசிரல் நடவடிக்கையில் ஈடுபாடுகாட்டி வருவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. 

இத்திட்டத்தின்கீழ் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இப்படையின் தளபதி பிரதி பொலிஸ்மா அதிபர் லயனல் குணதிலகவின்  அறிவறுத்தலுக்கமைய இம்மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்கள், மறறும் பொது சனங்கள் கூடும் இடங்களில் கிருமித்தொற்று தெளிக்கும் பணிகள் தற்பொழுது துரிதமாக இடம்பெற்று வருகின்றன். 

இதற்கமைய இன்று (12) மாவட்ட செயலகம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசனைத் திணைக்களம், அரசாங்க அதிபரின் வாசஸ்தலம் உட்பட பல அரச அலுவலகங்களிலும் இத்தொற்று நீக்கல் நடவடிக்கை பொலிஸ் அதிரடிப் படைக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஆலோசனைக்கமைய பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையின் தெழிவூட்டல்களைப் பின்பற்றி பொதுச்சுகாதார பரிசோதகர் ராஜ்குமார் மற்றும் பொலிஸ் அதிரடிப்படை தாண்டியடி முகாமின் பிரதம பொலிஸ் பரிசோதகர் விஜயரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 5 குழுக்கள் இத் தொற்று நீக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 






SHARE

Author: verified_user

0 Comments: