மட்டு.மாநகர எல்லைக்குள் காணப்படுகின்ற தூர்ந்து வடிகான்களை சுத்தப்படுத்தி புனரமைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அங்கீகாரம்.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (20) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலாகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பில் உள்ள வடிகான்கள் முகாமைத்துவம் பற்றி முதல்வர் அவர்களால் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. வெள்ள காலங்களில் மக்கள் எதிர்நேக்கும் அசெகரியங்கள் பற்றியும், அதற்கு தீர்வாக வடிகான்கள் அமைப்பு முறை மற்றும் பராமரிப்புகுறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடிகான்கள் நிரம்பி வழிந்து மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பல முன்னெடுப்புக்கள் முதல்வர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் மட்டக்களப்பு மாநகர எல்லையில் முழுமைத்துவமான வடிகான்கள் அமைப்பு மற்றும் வடிகான்கள் பராமரிப்பு பற்றிய திட்டங்கள் அமைந்துள்ளன.
ஆளுனருடனான கலந்துரையாடலில் வடிகான் விடயம் பற்றி பிரதான பேசு பொருளாக முதல்வர் அவர்களால் கருத்து பரிமாறப்பட்டதுடன், அதற்கான தீர்வுகள் சிலவற்றை நடைமுறைப்படுத்த ஆளுநரால் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படிக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன், ஆளுநரின் செயலாளர், திட்டமிடல் பணிபாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment