அரச போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மாவட்டத்திற்குள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் அறிவித்தலின் பிரகாரம் மட்டக்களப்பு அரசாங்க போக்குவரத்து சாலைகளில் இருந்து வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்தினை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு சாலை முகாமையாளர்களுக்கு அரசாங்க அதிபரினால் அறிவுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது இயங்கிவருகின்ற மட்டக்களப்பு வாகரை காத்தான்குடி ஏறாவூர் ரிதிதன்ன வாழைச்சேனை களுவாஞ்சிக்குடி ஆகிய சாலைகளில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட சேவையான உள்ளுர் சேவையாக மாவட்டத்திற்குள் மட்டும் சேவையினை வழங்கும்படியாக பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சேவையில் சுகாதாரத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படவேண்டும் எனவு ஒரு பஸ்வண்டியில் 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படல் வேண்டும் எனவும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசங்களை போடுவதுடன் சமூக இடைவெளியையும் கண்டிப்பாக பின்பற்றப்படல் வேண்டும்.
வெளிமாவட்டங்களுகிடையே போக்குவரத்துக்களை மேற்கொள்வது தற்போதைய காலகட்டத்தில் ஆபத்தினை எதிர்கொள்ளவேண்டி ஏற்படலாம் என்பதினால் தான் மாவட்டங்களுக்கிடையிலான அத்தியாவசிய சேவையிணை மாத்திரம் மேற்கொள்ளுமாறு வேண்டுகொள் விடுக்கப்படுகின்றது இவ்வறிவித்தலை இறுக்கமாக கடைப்பிடிக்கும் படி பிராந்திய முகாமையாளர் இலங்கை போக்குவரத்து சபைக்கு அரசாங்க அதிபரினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment