மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் பொலிவடைந்த கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் சிரமதானமும், மரநடுகையும் இடம்பெற்றது.
இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடுபூராவும் செயற்படுத்தப்பட்டுள்ள பொலிவடைந்த கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் சிரமதானப்பணியும் மரநடுகையும் ஞாயிற்றுக்கிழமை (01.03.2020ம் திகதி) இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கலைச்செல்வி வாமதேவா, முகாமைத்துவப் பணிப்பாளர் க.தங்கத்துரை, திட்ட முகாமையாளர் எஸ்.ரஜிந்தினி, மாவட்ட செயலக சமுர்த்தி முகாமையாளர் அன்னமலர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.
நலிவடைந்த கிராமங்களை பொலிவடையச் செய்யும் நோக்குடன் இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்டோர் இணைந்து பிரதேச செயலக வளாகத்தினை சிரமதானம் மூலமாக புற்களையும், குப்பைகளையும் அகற்றி சுத்தம் செய்ததுடன் பிரசே செயலாளர் உள்ளிட்டோரால் மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டது.
0 Comments:
Post a Comment