19 Mar 2020

மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

SHARE
மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதன் பரவலைத் தடுப்பதற்காக தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அரச நிறுவனங்களில் காணப்படுகின்ற மக்கள் கைகளால் தொட்டுப் பயன்படுத்தக்கூடிய இடங்கள், பொருட்கள், அரச வாகனங்கள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் இந்த தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் கே.சத்தியசீலன் மேற்பார்வையில் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. 

இதனடிப்படையில் வேட்புமனு கையளிக்கும் இறுதிநாளாகிய வியாழக்கிழமை (19) மட்டக்களப்பு மாவட்டசெயலகத்திலும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 




SHARE

Author: verified_user

0 Comments: