ஆற்றல் பேரவையும், மண்முனைப்பற்று பிரதேச சபையும் இணைந்து நடத்திய மகளிர் தின விழா சிறப்பாக இடம்பெற்றது.
அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம், ஆற்றல் பேரவை தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி கரன்யா சுபாகரன், சரீரம் நிறுவனத் தலைவர் ஆ.யோகேஸ்வரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.கந்தசாமி,பொ.முருகமூர்த்தி,செயலக உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிலிருந்து சாதித்த பெண்களும் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச பிரிவில் கிராம சேவையாளராக கடமையாற்றும் பெண்களும் கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment