5 Feb 2020

சமாதானக் கல்வியின் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டும் சர்வமத அமைப்பின் இணைப்பாளர் மனோகரன்.

SHARE
சமாதானக் கல்வியின் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டும் சர்வமத அமைப்பின் இணைப்பாளர் மனோகரன்.
இலங்கையின் 72வது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இலங்கையர் அனைவருக்கும் சமாதானக் கல்வியின் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டும். என தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர்.மனோகரன் தெரிவித்தார்.

அதன் முதற்கட்டமாக மட்டக்களப்பில் சமூக ஆர்வலர்களுக்கு சமாதானக் கல்வி அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக புதன்கிழமை 05.02.2020 கருத்துத் தெரிவித்த அவர்,

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில், சர்வமத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, நாட்டின் 18 மாவட்டங்களிலிருந்தும் இந்து, இஸ்லாம், பௌத்த, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் இணைந்த சர்வ மதப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் அங்கத்தவர்கள் முரண்பாடற்ற, நீண்ட, நிலைத்து நிற்கும் சமாதானத்துக்காக கலந்துரையாடல்களிலும் சமூக நல்லிணக்க கள விஜயங்களிலும், உதவு ஊக்கச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

‪சமூகங்களுக்கிடையில் அவ்வப்போது ஏற்படுத்தப்படுகின்ற பிளவுகளை வளரவிட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூக நல்லிணக்கச் செயற்பாட்டிற்கும் அமைதிக்கும் அது கேடாக மாறும்.

இன முரண்பாட்டு சூழ்நிலைகளை அதன் ஆரம்பத்திலேயே இல்லாமலாக்கி விட வேண்டும்.

அதற்காகவே சமாதமானக் கல்வியின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: