9 Aug 2026

கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான கள விஜயம்.

SHARE

கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான கள விஜயம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயத்தின் பங்கு பற்றுதலுடன் கள விஜயம் சனிக்கிழமை(08.08.2026) மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான சாத்திய வளங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன. 

கண்டியனாறு குளம் அபிவிருத்தி செய்யப்படுவதன் மூலம் 600 ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்களில் இருபோக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என இதன்போது விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டன. 

இதன் மூலம் இப்பகுதி விவசாயிகளின் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ் விஜயத்தில் மண்முனை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கோபாலப்பிள்ளை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து இதன்போது கொண்டனர்.











SHARE

Author: verified_user

0 Comments: