சண்டே லீடர்,மோனிங் லீடர் பத்திரிகையின் ஆசிரியரும்,சிரேஸ்ட ஊடகவியலாளரும்,பிரபல சட்டத்தரணியுமான லசந்த விக்ரமதுங்கவின் 11வது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை(9)மாலை 4 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள ஊடகவியலாளர் நினைவு தூபி முன்பாக இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாட்டில் மடடக்களப்பு தமிழ் ஊடகவியலாளார் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்,ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இதன்போது ஈகைச்சுடரேற்றல்,மலரஞ்சலி,அஞ்சலி உரை என்பன இடம்பெற்றுள்ளதுடன் அன்னாரின் சிறப்பான ஊடகப்பணியை வடகிழக்கு உட்பட நாட்டிலே உள்ள ஊடகங்கள்,ஊடகவியலாளர்கள், தொடரவேண்டும் என்பதோடு சுதந்திர ஊடகம் இலங்கையில் நசுக்கப்பட்டால் நாட்டின் சுதந்திரம்,மனித உரிமைகள் நசுக்கப்படும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேட்டுக்கொண்டார்.
0 Comments:
Post a Comment