26 Dec 2019

இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு மனித உரிமைகள், பெண்கள், சிறுவர் உரிமைகள் சட்டப் பாதுகாப்பு மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன்.

SHARE
இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு மனித உரிமைகள், பெண்கள், சிறுவர் உரிமைகள் சட்டப் பாதுகாப்பு  மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன்.

நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது என எவரும் கூறமுடியாது குறிப்பாக இந்த விடயத்தில் பெண்கள் ஒரு படி முன்னே சட்டப் பாதுகாப்பு அறிவுப் புலமையைப் பெற்றிருக்க வேண்டும் என்பதால் மட்டக்களப்பிலுள்ள இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு அறிவூட்டப்பட்டு வருவதாக மட்டக்களப்பு  மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்;டம் தழுவிய ரீதியில் இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு சட்டப்பாதுகாப்பு பற்றிய பயிற்சி நெறிகள் சம்பந்தமாக வியாழக்கிழமை 26.12.2019 அவர் கருத்து வெளியிட்டார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்.
சட்டத்தின் பாதுகாப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள், அடிப்படை உரிமைகள் உட்பட அனைத்து வகை  சட்டப் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகி;ன்றன.

பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவிகள் உட்பட உயர்கல்வியை அடைந்து கொண்ட யுவதிகள் இந்த இலவசமாக சட்டப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பயிற்சி நெறியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இலங்கை சட்டங்களின் தரம், அனைத்துலக சட்டங்களின் தராதரங்கள், நீதிப் பொறிமுறை, தகவல் அறியும் உரிமை, திருமணம், விவாக ரத்து,  தாபரிப்பு உட்பட அனைத்து வகையான சட்டப் பாதுகாப்பு அறிவுகளும் இந்தப் பெண்களுக்கு  வழங்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தை முழுவதுமாக உள்ளடக்கியதாக இந்த சட்டப் பாதுகாப்புப் பயிற்சி நெறிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த சுமார் 74 பெண்கள் தமது பயிற்சிகளை முடித்துக் கொண்டு சான்றிதழ்களைப் பெற்றதும் எதிர்கால வளவாளர்களாக அவர்கள் செயற்படவுள்ளார்கள்.

எதிர்காலத்தில் இவர்களைக் கொண்டே சகல சமூகப் பெண்களுக்குமான விழிப்புணர்வை ஊட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு இயற்கையைப் பாதுகாத்தலும் பொலித்தீன், இரசாயனப் பாவனையை மக்களாக முடிவுக்குக் கொண்டு வருதல் உட்பட இயற்கை நேய ஆக்கபூர்வ வாழ்க்கை முறைக்கும் விழிப்புணர்வுகள் வழங்கப்படுகின்றன.

பெண்களின் அறிவு சட்டத்துறையிலும் நாட்டின் சட்ட திட்டங்களை அமுல்படுத்துவதிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

SHARE

Author: verified_user

0 Comments: