பெரியகல்லாறு இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் இலங்கை போக்குவரத்து பஸ் பாதையைவிட்டு நீரோடைக்குள் பாய்ந்துள்ளது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பிரதான வீதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் வியாழக்கிழமை(31)இரவு 11.39 மணியளவில் பண்டாரவளையிலிருந்து திருகோணமலைக்கு கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலையூடாக பயணிக்கையில் பெரியகல்லாற்றில் பாதையை விட்டு நீரோடைக்குள் பாய்ந்துள்ளது.இதனால் குறித்த பஸ்ஸில் பயணித்த மூன்று பயணிகள் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வருகின்றார்காள்.
இவ்விபத்து சம்பந்தமாக களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் நீரோடைக்குள் பாய்ந்துள்ள பஸ்ஸை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
0 Comments:
Post a Comment