எமக்கு தேவை ஜனநாயக மயப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற அனுபவமுள்ள தலைவர்தான் இராணுவ ஆட்சியாளர் அல்ல - ஞா.ஸ்ரீநேசன் எம்.பி.
எமக்கு தேவை ஜனநாயக மயப்படுத்தப்பட்ட பாராளுமன்ற அனுபவ முள்ள தலைவர் தான் தவிர இராணுவ ஆட்சியாளர் அல்ல. சஜித்துக்கு பின்னால் உள்ள முஸ்லீம் தலைவர்களை விட மொட்டு பக்கம் உள்ளவர்கள் தான் ஆபத்தானவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (10) அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போத அவர் மேலும் குறிப்பிடுகையில்….
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற தெளிவுபடுத்தலை மேற்கொள்ளவேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ் தேசிய கூட்ட மைப்புக்கு உள்ளது. கடந்த கால இருண்;ட வேதனைகளை படிப்பினையாக வைத்து இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆழமாக சிந்தித்து அன்ன சின்னத்தில் போட்டியிடும் சஜித்துக்கு தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்ற முடிவினை எடுத்துள்ளது.
முன்பு அநீதிகளை செய்து பத்திரிகையாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர் நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்தமையை மனதில் வைத்து கொண்டு அரசில் யாப்பு முயற்சியை குழப்பியடித்தவர்கள் தான் இன்று நாங்கள் அரசியல் தீர்வை தருவதாக ஏமாற்றி குற்றம் சுமத்துபவர்கள் தான் அதனை தடுத்து நிறுத்தியவர்கள் முன்பு இவர்களின் ஆட்சியில் தான் பல குற்றங்கள் முன்னெடுக்கப்பட்டது. இப்போது அவர்களுடன் தான் வியாழேந்திரன் இணைந்துள்ளார்.
தற்போது கிழக்கின் இருப்பைபற்றி பேசுவோர் தான் விடுதலை போராட்டத்தை காட்டி கொடுத்தவர்கள். சஜித்துக்கு பின்னால் உள்ள முஸ்லீம் தலைவர்களை விட மொட்டு பக்கம் உள்ளவர்கள் தான் ஆபத்தானவர்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழ் பேசும் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment