12 Nov 2019

SHARE
இலங்கை செங்சிலுவை சங்கத்தின் பொதுக் கூடடமும் கௌரவிப்பும்
இலங்கை செங்சிலுவை சங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூடடம் 09-11-2019 அன்று நடைபெற்றது . தலைவர் வி முரளீதரன் தலைமை தாங்க,  செயலாளர்  நிமால் குமார், பொருளாளர் ஜெயசங்கர் மற்றும் சங்க உறுப்பினர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்  இந்த நிகழ்வில் இலங்கை செங்சிலுவை சங்கத்தின்  முன்னாள் தலைவர்   வைத்திய கலாநிதி ஞானகுணாளன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது செங்சிலுவை சங்க இயக்கத்துக்கு 30 வருட  சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்துடன்  நினைவுச் சின்னம் வழங்கி வாழ்த்தினார்கள் 
1989 ஆம் ஆண்டு இலங்கை செங்சிலுவை சங்கத்தை திருகோணமலையில் தொடங்கி தேசிய சங்கத்துடன் இணைத்து யுத்தத்தாலும் அநர்த்தத்தினாலும் பாதிக்கப் பட மக்களுக்கு கடந்த 30 வருடங்களாக ஆற்றிய சேவையை  நினைவு கூர்ந்து செயலாளர்  நிமால் குமார் உரையாற்றினார்.
இந்த பாராட்டு வைபவகத்துக்கு  நன்றி கூறிய வைத்திய கலாநிதி ஞானகுணாளன், தான் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை யின் தலைவராக செயல் படுகின்ற போதிலும் எதிர் வரும் காலத்தில இலங்கை செங்சிலுவை சங்கம் சிறந்த முறையில்  செயல் படுவதட்கான  தேவையான சகல உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: