சர்வதேச சிறுவர் தின நிகழ்வு.சர்வதேச சிறுவர் தின நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் தினம் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் டேபா மண்டபத்தில் இன்று (01.10.2019) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கதாநாயகர்கள் ஆகிய சிறுவர்களுகளை கௌரவித்தும் பாராட்டியும் பரிசுகளும் வழங்கப்பட்டு சிறுவர்களுக்கான நாடக ,நடன மற்றும் விவாத போட்டி நிகழ்வுகள் நடத்தப்பட்டது எதிர்காலத்து பிரஜைகளாகிய சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்காப்பட வேண்டும் என்றும் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
சிறப்பு அதிதியாக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.உர்மிலா சுவேந்திரன் ,அரசசார்பற்ற நிறுவனத்தலைவர்கள் ,அரச திணைக்கள தலைவர்கள் ,பொலீஸ் உத்தியோகத்தர்கள் ,அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
உலக சிறுவர் தின நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்நிகழ்வில் சிறார்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி சிறார்களை கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment