18 Sept 2019

ஏப்ரல் குண்டுவெடிப்பில் மட்டக்களப்பில் உளரீதியாக பாதிக்கப்பட்ட சிறார்களைஆற்றுப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் உதவி

SHARE
ஏப்ரல் குண்டுவெடிப்பில் மட்டக்களப்பில் உளரீதியாக பாதிக்கப்பட்ட சிறார்களைஆற்றுப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் உதவி திட்டத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
ஏப்ரல் 21குண்டுவெடிப்பில் மட்டக்களப்பில் உளரீதியாக பாதிக்கப்பட்ட சிறார்களைஆற்றுப்படுத்தும் விசேட திட்டத்தின்கீழ்மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பரிந்துரைக்கமைய  ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் உதவி திட்டத்தில் கற்றல்மற்றும் பொழுதுபோக்கு உபகரணங்கள் நேற்று (16) மாலை வழங்கிவைக்கப்பட்டன .
மட்டக்களப்பு உளநல சமூக ஒன்றியம்   அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின்ஆலோசனையில் பாதிக்கப்பட்ட சிறார்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்தித்து செய்த ஆற்றுப்படுத்துதல் திட் டத்தின் மதிப்பீட் டின்  அடிப்படையில் இந்த உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இந்த உதவிப்பொருட்களை அரசாங்க அதிபர்  உதயகுமார் சம்பி ரதாய பூர்வ மாக வழங்கி வைத்தார்.இந்நிகழ்வில் மட் டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மனநல ஒருங்கிணைப்பு வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி பாமினி அச்சுதன்மாவட்ட உளவள துணை அதி காரி கே.மதிவண் ணன்,சிறுவர் மேம்பாட்டுஉத்தியோகத்தர் வீ.குகதா ஸன்.உட்பட பல அதிகாரி களும் பாதிக்கப்பட்டசிறார்களுடன் பெற்றோரும் பிரசன்ன மாகியிருந்தனர்.
இங்கு பாதிக்கப்பட்ட சிறார்கள் 75 பேருக்குஉதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அரச அதிபர் உதயகுமார் இங்கு கருத்து வெளியிடுகையில்.. குண்டு வெடிப்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மனஅழுத்தத் துக்குள் ளான   மக்களை ஆற்றுப்படுத்தஅரச மற்றும்அரசசார்பற்ற நிறுவனங்கள் கூடிய கவனம் செலுத்திசெயல்பட்டுவருகின்றன அந்தவகையில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்    பாதிக்கப்பட்ட  சிறார்களுக்கு உதவிகளை வழங்க முன்வந்தமைக்கு நன்றி பாராட்டுகின்ரோம்.இவ்வாறான செயல்பாடுகள் இலங்கையில் மனிதத்துவம் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது .பாதிக்கப்பட்ட சிறார்களின் நலன்கருதி மேலும் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முன்வரவேண்டும் எனகேட்டுக் கொண்டார்.





SHARE

Author: verified_user

0 Comments: