கடுக்காமுனையில் சிலைதிறப்பும் மாணவர்கள் கௌரவிப்பும்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை திறப்பும், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் சனிக்கிழமை (03) இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் மு.குணேசலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிலைக்கு விசேட பூசை ஆராதனைகள் நடைபெற்றமையினைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன், அரசகருமமொழிகள், இந்துவிவகார அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளர் க.கோபிநாத் ஆகியோர்கள் சிலையின் நினைவுக்கல்லினை திறந்து வைத்தனர்.
வாலைசோதிடர், வைத்தியர் பூ.சின்னத்தம்பி அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரின் பேரப்பிள்ளைகளான சானுஜன், சதுர்சன் ஆகியோரின் நிதியுதவியில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த 28மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டு வங்கிக்கணக்கு புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிதியுதவியினை அக்கிராமத்தினைச் சேர்ந்த முருகேசபிள்ளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment