5 Aug 2019

வவுணதீவு மாணவர்களுக்கு சிப்தொற புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டம்

SHARE
வவுணதீவு மாணவர்களுக்கு சிப்தொற புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டம்.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்கள் தெரிவு இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்காக மாணவர்களைத் தேர்வு செய்யும் நேர்முகப் பரீட்சை  சனிக்கிழமை 03.08.2019 அன்று வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்விப் பொதுத் தராதரம்  கற்பதற்கென இவ்வருடம் 2019ஆம் ஆண்டில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு சமுர்த்தி திணைக்களத்தினால் இரண்டு வருடங்களுக்கு அவர்களின் கல்வியைத் தொடர்வதற்காக மாதாந்தம் 1500 ரூபா வீதம் உதவு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்கு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 24 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் 237 மாணவர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

சமுர்த்தி சிப்தொற எனும் புலமைப் பரிசில் திட்டம் சமுர்த்தி திணைக்களத்தினால் வருடந்தோறும்  சமுர்த்தி உதவி பெறும் பயனாளிக் குடும்பங்களிலுள்ள மாணவர்களின் உயர் கல்வி மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டு  வருகின்றது.

வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தலைமையில் நடைபெற்ற நேர்முகத் தேர்வு நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. ஜெயக்குமணன், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். தங்கத்துரை, சமுர்த்தி முகாமையாளர் எஸ். ரஜிந்தினி, சமுர்த்தி சமூக பாதுகாப்பு விடய உத்தியோகத்தர் கே. ஜெயக்குமார் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: