2 Jun 2019

மாதமொன்றுக்கு 24,000 பேர் புகைத்தல் பாவனையில் பழக்கப்படுகின்றார்கள்

SHARE
நாட்டிலே புகைத்தலினால் வருடமொன்றிற்கு இருபதினாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் பேரளவிலான நம் நாட்டவர்கள் மரணத்தை தழுவுகின்றார்கள். இவ்வாறு மரணிப்போருக்கு இணையாக நாளொன்றுக்கு ஆகக்குறைந்தது 80பேர் சிகரெட் பாவனைக்கு புதிதாக இணைக்கப்படுகின்றார்கள். மாதமொன்றுக்கு 24,000 பேர் புகைத்தல் பாவனையில் பழக்கப்படுகின்றார்கள் என சமூக வலுவூட்டல் இராஜங்க அமைச்சர் அலிஷாஹிர் மௌலானா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், மாவட்ட சமுர்த்தி திணைக்களமும் இணைந்து சர்வதேச புகைத்தல் தினம் வெள்ளிக்கிழமை (31) அனுஸ்டிக்கப்பட்டது. இதன் பின்னர் மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் விஷேட கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராசா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, சமுர்த்தி முகாமையாளர்கள், சமூதாய சீர்திருத்த உத்தியோகஸ்தர்கள்,உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் சமூக வலுவூட்டல் இராஜங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்… எமது நாட்டிலே சிகரெட் பாவனை வேகமாகக் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது 1994 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டுவரையுமான காலப்பகுதியில் சுமார் 14 வீதத்தினால் குறைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றது. இத்தகவல்கள் புகையிலைக் கம்பனியைப் போன்று நிரூபணமாகியுள்ளது. இச்செயற்பாட்டைக் கடைப்பிடித்து புகைத்தல் பாவனையை எவ்வாறு குறைகின்றது என்பதை பார்ப்பதனாலும், அதனைப்பற்றி நியாயமான முறையில் உணர்வதனாலும் சர்வதேசத்தில் புகைத்தலை கட்டுப்படுத்துவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கின்ற ஒரு வலுவான நாடாக திகழ்கின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் புகைத்தல் பொருட்களை தயாரிக்கின்ற கைத்தொழில் கம்பனிகள் தமது சந்தைப்படுத்தலை தக்கவைப்பதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.

நம் நாட்டிலே சிகரெட் பாவனைக்காக இலங்கையர்களினால் 2500 இலட்சம் ரூபா செலவு செய்யப்படுகின்றது. சிகரெட் பாவனையால் இருதய மற்றும் புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு முன்பு பாலியல் பலவீனத்தை ஏற்படுகின்றது. சிகரெட் புகைப்போருக்கு எந்நேரமும் கோபம் ஏற்படுதல், அருவருப்பு, வயதைவிட முதுமையான தோற்றம் மற்றும் உடலிருந்து தூர்நாற்றம் வீசும் நிலையேற்பட்டு அவர்கள் தமது குடும்பத்தினாலும், சமுதாயத்தினாலும் நாளாந்தம் ஒதுக்கப்படுகின்றார்கள்.

இன்று பார்த்தால் ஏழ்மையான குடும்பமொன்றின் வருமானத்தில் அரைவாசிப் பங்கு மதுபானத்துக்கு செலவு செய்கின்றார்கள்.சில குடும்பத்தில் கூலித்தொழில் செய்து கிடைக்கின்ற ஆயிரம் ரூபாயில் 800 ரூபாவை பிள்ளைகளுக்கு மற்றும் மனைவிக்கு தெரியாமல் போதைக்காக வீண்விரயம் செலவு செய்கின்றார்கள். இதனால் அக்குடும்பம் வறுமையில் தத்தளிக்கின்றது. பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டு அக்குடும்பம் தொடர்ந்தும் வறுமையாக இருக்கின்றார்கள். மதுபாவனை புகைத்தலுக்கு செலவு செய்யும் பணத்தை பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்வதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெற்றோர்கள் முன்வர வேண்டும் என எதிர்பார்கின்றேன்.

இன்று எமது நாட்டில் வருடமொன்றிக்கு 30,000 பொதுமக்கள் மதுபாவனையின் காரணமாக ஏற்படுகின்ற நோய்களினால் மரணிப்பதாக தொற்றாத நோய் தொடர்பான கருத்துக்கள், ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றது. எனவே இதனை ஒவ்வொரு பொதுமக்களும், புத்திஜீவிகளும், இளம் சமுதாயத்தினரும் சித்தித்து செயற்பட வேண்டும்.

நாட்டிலே புகைத்தலினால் வருடமொன்றிற்கு இருபதினாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் பேரளவிலான நம் நாட்டவர்கள் மரணத்தை தழுவுகின்றார்கள். இவ்வாறு மரணிப்போருக்கு இணையாக நாளொன்றுக்கு ஆகக்குறைந்தது 80பேர் சிகரெட் பாவனைக்கு புதிதாக இணைக்கப்படுகின்றார்கள். மாதமொன்றுக்கு 24,000பேர் புகைத்தல் பாவனையில் பழக்கப்படுகின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். போதையில் இருந்து விடுபட்ட நாடாக திகழ்வதற்கு அனைவரும் கைகொடுக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையை முற்றாக நீக்குவதற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 7680 பேருக்கு வறுமை நிவாரண சமுர்த்தி கொடுப்பனவு பத்திரங்கள் எதிர்வரும் வாரங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்படவுள்ளது. இக்கொடியை விற்பனை செய்வதன் மூலம் மாவட்டத்தில் வறுமையான குடும்பங்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றது. என அவர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: