29 May 2019

பின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியின் விஷேட நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாணத்திற்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன்

SHARE
பின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியின் விஷேட நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாணத்திற்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன்.
பின்தங்கியதும் தனித்துவிடப்பட்டதுமான கிராம அபிவிருத்தித் திட்டத்திற்கென கிழக்கு மாகாணசபையினூடாக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக   கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள கொத்தியாபுலை கிராமத்தில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி வேலைத் திட்டத்தின்கீழ் கிராம அபிவிருத்தி திட்டங்களை தெரிவு செய்யும் நிகழ்வு செவ்வாய்கிழமை 28.05.2019 இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே  மாகாண திட்டமிடல் பணிப்பாளர்  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்த வேண்டுகேசாளுக்கு அமைவாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு தலா 100 மில்லியன் ரூபா வீதம்  இந்த 300 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் செங்கலடி, கிரான், வவுணதீவு, வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, வெல்லாவெளி, ஏறாவூர் நகர் மற்றும் ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கிராம அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், வவுணதீவு பிரதேசத்தில் இந்த கொத்தியாபுலை, ஆயித்தியமலை கிராமங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வேலைத் திட்டங்கள் யாவும் மக்கள் பங்களிப்புடன் இவ்வருடத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் திட்டமிடல் பணிப்பாளர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான மயில்வாகனம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மோகன் பிறேம்குமார், மண்முனை மேற்கு பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அரசகுமார்,  கிராம  உத்தியோகத்தர் எஸ். குருபரன் உட்பட கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: