கடை உடைத்து பணம் நிறைத்து வைக்கப்பட்டிருந்த பள்ளிவாசல் உண்டியல், கல்லாப் பெட்டியிலிருந்த பணம் திருட்டு
ஏறாவூர் காட்டுப்பள்ளி வாசலுக்கு சொந்தமான பணம் நிரம்பியிருந்த உண்டியல், கடையின் கல்லாப் பெட்டியிலிருந்த பணம் உட்பட இன்ன பிற பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை 17.04.2019 அதிகாலை அளவில் ஏறாவூர் காட்டுப் பள்ளி வீதியை அண்டியுள்ள காட்டுப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அப்பள்ளி வாசலுக்குச் சொந்தமான கடைத்தொகுதி கடையொன்றில் இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.
பாபுஜீ தோசைக் கடையின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த பள்ளிவாசலுக்குச் சேரவேண்டிய நிறைத்து வைக்கப்பட்டிருந்த உண்டியல் பணம், தோசைக் கடைக் கல்லாப் பெட்டியிலிருந்த பணம் அத்துடன் இன்னும் சில இலத்திரனியல் பொருட்களும் திருடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment