4 Apr 2019

முன்னாள் போராளிக்கு மின்சார இணைப்பு பெறுவதற்கதன உதவித் தொகை வழங்கி வைப்பு.

SHARE
மின்சார இணைபைப் பெறுவதில் பல இன்னல்களை எதிர்கொண்டு வந்த மகிழடித்தீவைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவருக்கு  அமைச்சர் மனோ கணேசனின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவருமான கணேசமூர்த்தி கோபிநாத் அவர்கள் 20000.00 ரூபாய் பணத்தை அவருக்கு வழங்கிவைத்துள்ளார்.
கணேசமூர்த்தி கோபிநாத் அவர்கள் கிழக்கின் இளைஞர் முன்னணி எனும் அமைப்பினூடாக படுவாங்கரைப் பிரதேச மாணவர்களின் நன்மை கருதி இலவச் கல்விச் செயலமர்வுகளை மேற்கொண்டு வருகின்றார். இவற்றைவிட பாதிக்கப்பட்ட மக்களை இனம்கண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பெரிதும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: