வவுணதீவு பொலிஸ் பிரிவு, குருந்தையடி முன்மாரி, காஞ்சிரங்குடா கிராமத்திலுள்ள மாமரமொன்றியிலிருந்து கூலித் தொழிலாளியான ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்யாக்கிழமை 16.04.2019 மீட்கப்பட்ட இச்சடலம் 3 பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி தருமலிங்கம் (வயது 40) என்பவருடையது என அவரது மனைவி பொலிஸாரிடம் அடையாளம் காட்டியுள்ளார்.
தனது மகள் பாடசாலைச் சுற்றுலாசெல்வதற்காக உணவு தயாரித்து ஏற்ற ஒழுங்ககளைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் அதிகாலை 2 மணியளவில் எழுந்து வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டு வளவிலுள்ள மாமரக் கிளையில் தனது கணவர் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் மனைவி பொலிஸ் வாக்கு மூலத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர் புதுவருட மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் அதிக மதுபோதைக்கு உட்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை, விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment