மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளத்தில் வியாழக்கிழமை அதிகாலை 11.04.2019 இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான்குளம் தர்மபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் செல்லப்பா (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி கிரான் குளம் பிரதேசத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இந்த வயோதிபரை வேகமாக வந்த வேன் ஒன்று மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய இந்த வேனின் சாரதி காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்திய இந்த வேன் ஹம்பாந்தோட்டையிலிருந்து வந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த வயோதிபரின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments:
Post a Comment