ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டமான ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வாழ்க்கை தொழில் வழிகாட்டல் நிறுவனத்தை ஸ்தாபித்தல் தொடர்பான பயிற்சி பட்டறை வெள்ளிக்கிழமை(5) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரச அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
நவீன அண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தினால் வலுவூட்டப்பட்ட நாட்டின் அனைத்து பிரதேசங்களில் உள்ள அரச தனியார் தொழில் வாய்ப்புகளை உள்ளடக்கிய ஒரு தொழில் வங்கியை உருவாக்குதல் , தொழில் தேடுபவர்கள் கல்வி மட்டங்களுக்கு ஏற்ப தொழில் வாய்ப்புகளை வழங்குதல் , வர்த்தக ரீதியான வாய்ப்புகளை பெற்றுகொல்வதற்கான வர்த்தக வங்கி தொழில் தேடுபவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான வசதி வாய்ப்புகளை வழங்குதல் போன்ற பல விடயங்கள் இங்கு விளக்கப்பட்டன.
அத்துடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மாணவர்கள் , மற்றும் தொழில் தேடுபவர்கள் http://slicg.app என்ற இணையத்தள முகவரி மூலம் தங்களை பதிவு செய்து கொண்டு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிகழ்வில் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் எரிக் பிரசன்ன வீரவர்தன தொழில் வழிகாட்டல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் , அரசாங்க உத்தியோகத்தர்கள் அரச சார்பற்ற நிறுவன அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment