31 Mar 2019

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரிடமிருந்து ஆயுதங்களும் போதைப் பொருட்களும் மீட்பு

SHARE
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரிடமிருந்து ஆயுதங்களும் போதைப் பொருட்களும் மீட்பு.
மட்டக்களப்பு ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐயன்கேணியில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்கேத்தின் பேரில் சனிக்கிழமை (30.03.2019) மாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இளைஞனிடமிருந்து போதைப் பொருள்களும் கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஐயன்கேணி பாரதிபுரத்தைச் சேர்ந்த நெசானந்தன் ஜெயானந்தன் (வயது 25) என்ற இளைஞனே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்னார்.

இவருக்கு எதிராக ஏற்கெனவே 3 வழக்குகள் தொடர்பில் தேடப்பட்டு வந்துள்ளார் என பொலிஸார் மேலும் கூறினர்.

இந்த சந்தேகநபரிடமிருந்து 80 மில்லி கிராம் குடு, கைக்குண்டு 1, வாள்கள் 3, ரீ-56 ரக துப்பாக்கி ரவைகள் 9 ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஏறாவூர் பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் கூறினர்.


SHARE

Author: verified_user

0 Comments: